கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையிட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கட்டடக் கழிவுகளைக் கொட்ட வேண்டும். கட்டடக் கழிவுகளைக் கொட்ட ஒதுக்கப்பட்ட இடங்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டடக் கழிவுகளைக் கொட்ட வேண்டுமெனில் திடக்கழிவு மேலாண்மை துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.