தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 208. 85 டன் குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக டிஜிபி சங்கர் ஜிவால் இன்று(செப்.22) தெரிவித்துள்ளார். 2023 நவம்பர் முதல் கடந்த 14ம் தேதி வரை காவல்துறை சிறப்பு சோதனை நடத்தியதாகவும், இதன் அடிப்படையில் 21, 761 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10, 155 கடைகள் சீல் வைக்கப்பட்டு, ரூ. 17. 02 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.