அரசு போக்குவரத்துக்கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை, தமிழக அரசு கைவிட வேண்டும் என சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு வரை 23 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது அது 19 ஆயிரம் பேருந்துகளாகக் குறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், போக்குவரத்துத்துறையில் 25 ஆயிரம் காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.