மத்திய பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு ₹16 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த நாட்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்று பெயரை குறிப்பிடாததால் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லை என்று சொல்ல முடியாது எனக் கூறிய அவர், நாட்டிலேயே தமிழ்நாட்டு பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் முத்ரா கடன் திட்டத்தில் பயன் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.