போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து விற்ற 7 பேர் கைது

65பார்த்தது
போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து விற்ற 7 பேர் கைது
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கூரியர் மூலம் போதை மாத்திரைகள் சென்னைக்கு கடத்தி வரப்பட்டு, அதனை சிலர் கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்டி வருவதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எம். கே. பி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் உத்தரவின்பேரில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போதை மாத்திரை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து கொடுங்கையூர், மாதவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கூரியர் நிறுவனங்களை தொடர்பு கொண்டு போலீசார் வட மாநிலங்களில் இருந்து வரும் பார்சல் மற்றும் மாத்திரைகள் குறித்த தகவல்களை கேட்டு அறிந்தனர். இதில் குறிப்பிட்ட சில முகவரிக்கு மகாராஷ்டிராவில் இருந்து பார்சல்கள் வருவதாகவும், அதனை வீடுகளுக்கு டெலிவரி செய்யாமல் குறிப்பிட்ட நபர்கள் நேரில் வந்து வாங்கி செல்வதாகவும் தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாதவரம் கே. கே. ஆர் கார்டன் பகுதியில் உள்ள கூரியர் கம்பெனிக்கு மகாராஷ்டிராவில் இருந்து நேற்று முன்தினம் 3 கூரியர் பார்சல் வந்துள்ளது. வெவ்வேறு முகவரியில் வந்த அந்த கூரியரை பெற்றுக் கொள்ள நேரில் வருகிறோம் என்றும் வீட்டிற்கு அனுப்ப வேண்டாம் எனவும், கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு மர்ம நபர்கள் பேசியுள்ளனர்.

இதில் சந்தேகமடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் 7பேரை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி