திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்: உதயநிதி

68பார்த்தது
திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்: உதயநிதி
மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்க திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் கொளத்தூர், தண்டையார்பேட்டை பகுதியில் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியையும், புரசைவாக்கத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனையும் ஆதரித்து, அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், கடும் நிதி நெருக்கடியிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை அறிமுகம் செய்தார் முதல்வர். இதனால், 3 ஆண்டுகளில் பெண்கள் 460 கோடி தடவை பயணங்கள் செய்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளைக் கொண்டு பாஜக மிரட்டுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி