விருகம்பாக்கம், அன்னை சத்யா நகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் இன்று(செப்.24) விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, நியாய விலைக் கடைகளில் தரமான அரசி, பருப்பு மற்றும் எண்ணெய் விற்கப்படுகிறதா என்றும், எடை இயந்திரம் போன்றவற்றையும் பார்வையிட்டார். மேலும், பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.