தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-வுக்கு தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் மத்திய அரசால்செயல்படுத்தப்படும், ரயில்வேதிட்டங்களுக்கு தேவையானநிலங்களை எடுப்பதில், மாநில அரசு காலதாமதம் செய்வதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாக செய்தி வெளியானது.
இதற்கு பதிலளித்து, தமிழக வருவாய் அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு மொத்தம் 2, 443 ஹெக்டேர் நிலங்களை எடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதில் தூத்துக்குடி- மதுரை (வழி- அருப்புக்கோட்டை) புதியஅகல ரயில்பாதை திட்டத்துக்கு937 ஹெக்டேர், திருவண்ணாமலை- திண்டிவனம் புதிய அகல ரயில் பாதை திட்டத்துக்கு 276 ஹெக்டேர், ஈரோடு மாவட்டத்தில், கதிசக்தி பல்முனை மாதிரி சரக்குமுனையம் அமைக்க 13 ஹெக்டேர்என 1, 226 ஹெக்டேர் நில எடுப்புக்கு தமிழக அரசால் நிர்வாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது.