மக்களவை தேர்தல் தோல்வி: 23 தொகுதிகளில் அதிமுக ஆலோசனை நிறைவு

80பார்த்தது
மக்களவை தேர்தல் தோல்வி: 23 தொகுதிகளில் அதிமுக ஆலோசனை நிறைவு
மக்களவைத் தேர்தல் முடிவு தொடர்பாக 23 தொகுதி அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை நேற்று நிறைவடைந்தது. 24ம் தேதி முதல் இதர தொகுதி நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து அறிவதற்காக மக்களவைத் தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் கடந்த 10ம் தேதி முதல் கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

நேற்று 8-வது நாளாக விழுப்புரம், தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் பழனிசாமி பேசும்போது, எந்த பிரச்சினையாக இருந்தாலும் கட்சி தலைமையின் கவனத்துக்கு நிர்வாகிகள் கொண்டுவர வேண்டும். கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

நேற்றுடன் 23 மக்களவை தொகுதி நிர்வாகிகளுடனான ஆலோசனை நிறைவடைந்துள்ளது. மீண்டும் 24ல் அலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. அதன்படி, 24ல் தேனி, ஆரணி, 25ல் தென்காசி, ஈரோடு, 26ல் திருப்பூர், கடலூர், 29-ல் திண்டுக்கல், திருவள்ளூர், 30-ல் தூத்துக்குடி, நாமக்கல், 31-ல் கள்ளக்குறிச்சி, சேலம், ஆக. 1-ல் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை 5-ம் தேதி புதுச்சேரி, கரூர்தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி