3 ஆண்டுகால ஆட்சியில் 1, 355 கோயில்களில் குடமுழுக்கு: அரசு

71பார்த்தது
3 ஆண்டுகால ஆட்சியில் 1, 355 கோயில்களில் குடமுழுக்கு: அரசு
தமிழக அறநிலையத் துறை செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில் அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், தமிழகம் ஆயிரக்கணக்கான திருக்கோயில்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தஞ்சைப் பெரியகோயில் போல பழமையான, பிரம்மாண்டமான பல கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்களுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள், ஐம்பொன் சிலைகள், தங்கம், வெள்ளி நகைகள் எல்லாம் ஏராளமாய் இருந்தன. அவை எல்லாம் முறையாகப் பராமரிக்கப்படாமல் அங்காங்கே வாழ்ந்த பல பெருமக்களின் ஆக்கிரமிப்பில் முடங்கிப் பொதுமக்களுக்கு முறையாகப் பயன்படாமல் கிடந்தன.

இந்நிலையில் தான் ஆங்கிலேயர் ஆட்சியில் 1920-ம் ஆண்டில் டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டு, 1921 ஜனவரியில் நீதிக் கட்சி ஆட்சி சென்னை மாகாணத்தில் அமைந்தது. அந்த நீதிக் கட்சி ஆட்சியில்தான் திருக்கோயில் பணிகள் முறையாக நடைபெற வழிவகுக்கப்பட வேண்டும் என்பதற்காக 1925-ல் பனகல் அரசர் முதல்வராக இருந்தபோது இந்து சமய அறநிலையங்கள் துறை இந்தியாவிலேயே முதன்முதலில் தொடங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி