சென்னை: அடிமேல் அடிவைத்து உயரும் தங்கம் விலை
சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. ஆனால் கடந்த செப்டம்பரில் நாளுக்கு நாள் அதிகரித்த தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, ரூ. 60 ஆயிரத்தை நெருங்கியது. இப்படியே சென்றால் ஒரு கிராமாவது வாங்க இயலுமா என மக்கள் எண்ணிய நிலையில், எந்த அளவுக்கு உயர்ந்ததோ அதே அளவிற்கு இம்மாதத் தொடக்கத்தில் இருந்து விலை சரியத் தொடங்கியது. தொடர்ந்து இந்த வார தொடக்கத்திலுருந்து உயர்ந்து வருகிறது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து, 1 சவரன் ரூ. 58, 400-க்கும், 1 கிராம் ரூ. 7, 300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1, 01, 000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 101 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இரண்டு நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 101க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1, 01, 000க்கு விற்பனை செய்யப்படுகிறது.