கொளத்தூர் - Kolathur

சென்னை: மின்வாரியம்; ஒருமுனை மீட்டர்கள் 12 லட்சம் வாங்க பணி ஆணை

சென்னை: மின்வாரியம்; ஒருமுனை மீட்டர்கள் 12 லட்சம் வாங்க பணி ஆணை

அதிகரித்து வரும் மின் மீட்டர் தேவையை சமாளிக்க 12 லட்சம் ஒருமுனை மீட்டர்கள் வாங்க தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் பணி ஆணை வழங்கியுள்ளது.  இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் மின் இணைப்புகள் அதிகரித்து வருவதால் புதிய மீட்டர்களுக்கான தேவை தொடர்ந்து இருந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் அதிகரிப்பதால், தடையில்லா சேவை மற்றும் துல்லியமான மின் கணக்கீட்டை உறுதிசெய்ய நிலையான மீட்டர் விநியோகம் அவசியம். அந்த வகையில் 6 வட மாநில நிறுவனங்களிடம் இருந்து, 12 லட்சம் ஒருமுனை மீட்டர்கள் வாங்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.  தென்னிந்தியாவில் குறைந்த அளவில் மீட்டர் வழங்குனர்கள் இருப்பதால், வட மாநிலங்களில் உள்ள நிறுவனங்களிடமிருந்து இந்த மீட்டர்கள் வாங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீடியோஸ்


சென்னை
திருவள்ளூர்: இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
Nov 22, 2024, 03:11 IST/இராயபுரம்
இராயபுரம்

திருவள்ளூர்: இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

Nov 22, 2024, 03:11 IST
திருவள்ளூர் மாவட்டம், அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமா (31). ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் விக்னேஷ், சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், கோட்டூர்புரத்தில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றபோது அங்கு வியாசர்பாடி எம். கே. பி. நகர் 19வது தெருவை சேர்ந்த ஜோதிஸ் (33) என்பவருடன், ஹேமாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம், காதலாக மாறியது.  அப்போது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஹேமாவுடன் ஜோதிஸ் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், திருமணம் செய்ய மறுத்ததுடன், தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க ஹேமாவை கட்டாயப்படுத்தி உள்ளார். அவர்களும் ஹேமாவிடம் ஆபாசமாக பேசியுள்ளனர். இதனால், மன உளைச்சல் அடைந்த ஹேமா இதுகுறித்து புளியந்தோப்பு துணை ஆணையரிடம் புகார் அளித்தார்.  அதன்பேரில் எம். கே. பி. நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதிஸ் மற்றும் அவரது நண்பர்களான மருந்து விற்பனை பிரதிநிதி தரணி குமார் (33), கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த இன்ஜினியர் புவனேஷ்வரன் (32) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.