தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை விஸ்தரிக்கும் நோக்கில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 11. 41 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 330 கோடி செலவில் தரை மற்றும் 21 தலங்களுடன் ரூபாய் 5.57 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்கா இன்று (நவ. 22) முதலமைச்சரால் திறக்கப்பட உள்ளது.
இந்த விழாவின்போது பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அப் பூங்காவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ரூபாய் 18.18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தையும் முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.