உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி ஏன்? முதல்வர் விளக்கம்

75பார்த்தது
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி ஏன்? முதல்வர் விளக்கம்
அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகள் கட்சியின் வளர்ச்சிக்கும், ஆட்சித் திறன் மூலமாக தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே, அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பவள விழாவைக் கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தை ஆறாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. திமுக கரங்களில் தமிழக மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கிய போதெல்லாம் நிறைவேற்றிக் காட்டிய தொலைநோக்குத் திட்டங்களின் மூலமாக நாம் அடைந்த வளர்ச்சிதான், இன்று நாம் காணும் நவீன தமிழகம்.

இன்றைய தினம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது. அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். அந்த வளர்ச்சியின் மூலமாக மக்கள் பயனடைந்து வருவதையும் நேரடியாகப் பார்த்து வருகிறோம்.

திராவிட மாடல்’ ஆட்சியானது இந்தியாவுக்கே முன்மாதிரி ஆட்சியாக அமைய நாம் உழைப்போம். அறிவிக்கப்படும் ஒவ்வொரு திட்டமும், கடைக்கோடி இனி எந்நாளும் தமிழகத்தை திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆளும் என்ற நிலையை உருவாக்க உறுதியேற்போம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆயிரம் காலத்துப் பயிர். தமிழ் மண்ணின் தனித்தன்மையை நிலைநாட்ட, நாளும் மக்கள் தொண்டு ஆற்றிடுவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி