போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்....!

62பார்த்தது
போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்....!
சென்னை: “வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் திமுக அரசு தட்டிக் கழிக்கிறது. உடனடியாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் இல்லங்களில் பொங்கல் திருநாளை ஓரளவு மகிழ்ச்சியுடனாவது கொண்டாட அரசு வழிவகை செய்திட வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இன்றைய காலக்கட்டத்தில் போக்குவரத்து என்பது அனைத்து மக்களின் வாழ்விலும் இன்றியமையாததாகும். தமிழகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களுடைய பயணங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளையே நம்பி உள்ளனர். அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்ற நடைமுறையைக் கொண்டுவந்து தொழிலாளர்களின் நண்பனாகத் திகழ்ந்தார். அதன்படி, அதிமுக ஆட்சியில் 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் 1. 9. 2016 முதல் 31. 8. 2019 வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2019 முதல் 2022 வரை ஊதிய உயர்வு ஒப்பந்தம் கரோனா மற்றும் சட்டமன்றப் பொதுத் தேர்தலினால் தள்ளிப்போனது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி