கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ. 34 ஆக குறைந்துள்ளது. வெளிச் சந்தைகளில் கிலோ ரூ. 50 வரை விற்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு சந்தையில் கடந்த மே மாதம் முதலே தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த வாரம் ரூ. 70 வரை உயர்ந்தது. வெளி சந்தைகளில் சில்லறை விலையில் தரத்துக்கு ஏற்ப ரூ. 70 முதல் ரூ. 100 வரை விற்கப்பட்டது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் சிரமத்துக்குள்ளாயினர்.
பலர், தக்காளி இல்லாமல் சமைப்பது குறித்த ஆலோசனைகளை அதிக அளவில் யூடியூபில் தேடும் நிலைக்கு ஆளாயினர். இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோ ரூ. 34 ஆக குறைந்துள்ளது. வெளிச் சந்தைகளில் கிலோ ரூ. 50 வரை விற்கப்பட்டு வருகிறது.