தமிழகம் முழுவதும் மே 31ஆம் தேதி நிலவரப்படி, 53. 48 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 24. 63 லட்சம் ஆண்களும், 28. 85 லட்சம் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 281 பேரும் அரசு வேலைக்காக பதிவு செய்துவிட்டு காத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதில், 7810 பேர் 60 வயதை கடந்தவர்கள்.