பாஜகவின் அரசியல் கருவியாக செயல்படுகிறது அமலாக்கத்துறை

65பார்த்தது
பாஜகவின் அரசியல் கருவியாக செயல்படுகிறது அமலாக்கத்துறை
சேலத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம் நடந்த அமலாக்கத் துறை விசாரணையில் வழக்கறிஞர் அனுமதிக்கப்படாமல் மறுக்கப்பட்டு, அவர்கள் மிரட்டப்பட்டிருப்பது அதிகார அத்துமீறலாகும். பாஜகவின் அரசியல் கருவியாக செயல்பட்டு வரும் அமலாக்கத் துறை, தற்போது சாதிய ஒடுக்குமுறைக்கும், நிலப்பறிப்பு மோசடிக்கும் ஆயுதமாக மாறியிருப்பது விசாரணை அமைப்புகள் மீதான நம்பிக்கையை முற்றாக தகர்த்து வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள ராமநாய்கன்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கண்ணையன், கிருஷ்ணன் சகோதரர்கள் தேவேந்திரகுல வேளாளர் சாதிப் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களது தந்தையார் சின்னையன் நாற்பது வருடங்களுக்கு முன்பு சுத்தக் கிரயம் மூலம் பெற்ற 6. 5 ஏக்கர் நிலத்தை உழுது, சாகுபடி செய்து வாழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி