தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
முக்கிய அம்சங்கள்:
* 10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு.
* 2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ. 7. 5 கோடி ஒதுக்கீடு.
* நடப்பு ஆண்டில் 50, 000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும்.
* மண் பரிசோதனைக்கு ரூ. 6. 27 கோடி நிதி ஒதுக்கீடு.
* எள் சாகுபடியை அதிகரிக்க ரூ. 3 கோடி ஒதுக்கீடு.
* ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ ரூ. 18 கோடி நிதி ஒதுக்கீடு.
* ”ஒரு கிராமம் ஒரு பயிர்" திட்டம் 15, 280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
* விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம் அமைக்கப்படும்.
* கன்னியாகுமரியில் தேன் பொருட்களுக்கு பரிசோதனை கூடம் அமைத்து பயிற்சி வழங்க ரூ. 3. 60 கோடி நிதி ஒதுக்கீடு.
* சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ. 12. 4 கோடி நிதி ஒதுக்கீடு.
* வறண்ட நிலங்களில் தோட்டக்கலை மேம்பாட்டுக்கு ரூ. 3. 64 கோடி ஒதுக்கீடு.
* விவசயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்க ரூ. 2. 70 கோடி மானியம்.
* கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ. 20. 73 கோடி நிதி ஒதுக்கீடு.
* விவசயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ. 1775 கோடி ஒதுக்கீடு.