வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு: ஜி. கே. மணி வலியுறுத்தல்

60பார்த்தது
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி. கே. மணி வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி. கே. மணி கூறியதாவது, சட்டப்பேரவையில் இடஒதுக்கீட்டுக்கான பிரச்சினை குறித்து பேசிய நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு குறித்து பேசிய போது, பிஹார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மேலும் 10. 5 மேல் இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். குரூப் 1-ல் உள்ள முக்கிய உயர் பதவிகளில் 10. 5 க்கு மேல் இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதை நிரூபித்தால், நான் இன்றே சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

அரசியல் பொதுவாழ்வில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். அமைச்சர்கள் அப்படி நிரூபிக்கவில்லை என்றால் பதவி விலகுவார்களா? எனவே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான புள்ளி விவரத்தை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி