ஆர். எஸ். பாரதி மீது மானநஷ்ட வழக்கு ஏன்?: அண்ணாமலை விளக்கம்

59பார்த்தது
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு நான் தான் காரணம் என்று கூறியுள்ள ஆர். எஸ். பாரதிக்கு எதிராக நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரியுள்ளேன். ஆர். எஸ். பாரதியிடம் இருந்து பெறப்படும் ஒரு கோடி ரூபாயைக் கொண்டு கள்ளக்குறிச்சியில் குடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முகாம் அமைக்க செலவிடப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு மூத்தவர், தனது 80 வயதில் 60 ஆண்டுகால அரசியலைப் பார்த்திருக்கும் ஆர். எஸ். பாரதி திமுகவின் காலம் முடிந்துவிட்டது என்பது முழுமையாக தெரிந்துவிட்ட பிறகு, அவர் வாயில் இருந்து பொய், அவதூறு பேச்சுகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது. அதன் வெளிப்பாடு தான், கள்ளச்சாராய உயிரிழப்புக்கு நான் தான் காரணம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். எனவே, ஆர். எஸ். பாரதிக்கு எதிராக நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளோம். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரியுள்ளோம்.

ஆர். எஸ். பாரதியிடம் இருந்து பெறப்படும் ஒரு கோடி ரூபாயைக் கொண்டு கள்ளக்குறிச்சியில் குடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முகாம் அமைக்கப்படும். அதுதான் எங்களுடைய நோக்கம். எனவே, இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி