சந்தியா தேவிக்கு சிறந்த திருநங்கை விருது: முதல்வர் வழங்கினார்

52பார்த்தது
இந்த ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருதை சந்தியா தேவிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருநங்கைகளின் நலனுக்காக சிறப்பான சேவை புரிந்து, முன்மாதிரியாகத் திகழும் திருநங்கை ஒருவர், சமூக நலத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவால் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ம் தேதி, சிறந்த திருநங்கை விருது கடந்த2021-ம் ஆண்டு முதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தேர்வாகும் திருநங்கைக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி பூ கட்டும் தொழில் செய்து தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். வில்லிசையில் ஆர்வம் ஏற்பட்டு புராணக் கதைகளை படித்து தன் தனித் திறமையால் 1000-க்கும்மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை தமிழகம் மற்றும் கேரளாவில் நடத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி