கூட்டணி குறித்து விஜய்தான் முடிவு செய்ய வேண்டும்: சீமான்

59பார்த்தது
கூட்டணி குறித்து விஜய்தான் முடிவு செய்ய வேண்டும்: சீமான்
தேர்தல் கூட்டணி குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்தான் முடிவு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்யும் வகையில் தென் சென்னை மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து, தென் சென்னைக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

தொடர்புடைய செய்தி