தமிழகத்தில் நாளை முதல் வெப்பநிலை உயர வாய்ப்பு

85பார்த்தது
தமிழகத்தில் நாளை முதல் வெப்பநிலை உயர வாய்ப்பு
தமிழகத்தில் நாளை முதல் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனைஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 18-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும். நாளை முதல் 18-ம் தேதி வரை உள் மாவட்டங்களில் 106 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி