சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை ஆணையர் ஆலோசனை

582பார்த்தது
சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை ஆணையர் ஆலோசனை
சென்னையில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தலைமறைவு குற்றவாளிகள், ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி