நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்; சிபிசிஐடி முடிவு

65பார்த்தது
நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்; சிபிசிஐடி முடிவு
ஓடும் ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப்ரல் 6-ம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். தாம்பரத்தில் நடைபெற்ற இந்த சோதனையின்போது, ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத ரூ. 4 கோடி பணம் பிடிபட்டது. நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்தது. முதலில் தாம்பரம் போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில, சிபிசிஐடி சம்மனை ஏற்று கேசவ விநாயகன், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை ஆஜரானார்.

இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராகாத நயினார் நாகேந்திரன் உட்பட 3 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி