தமிழகத்தில் ஜன. 8 வரை மிதமான, கனமழை வாய்ப்பு

64பார்த்தது
தமிழகத்தில் ஜன. 8 வரை மிதமான, கனமழை வாய்ப்பு
தமிழகத்தில் இம்மாதம் 8-ம் தேதி வரை பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் பிற்பகலில் இருந்து மிதமான மழை பெய்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 04. 01. 2024 மற்றும் 05. 01. 2024 தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி