ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்: அண்ணாமலை

72பார்த்தது
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்: அண்ணாமலை
சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளைய தினம், 2024 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக, இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து வருகிறோம். தமிழகம் முழுவதிலிருந்துமே, பாதிக்கப்பட்ட மக்கள் துயர் துடைக்க, ஜாதி, மதப் பாகுபாடுகள் இல்லாமல் ஆதரவுக் கரங்கள் நீண்டன. நம் மக்களின் இந்த இயல்பான சமத்துவமும், சகோதரத்துவமும் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். பல ஆயிரம் கோடிகள் நம் வரிப்பணத்தைச் செலவு செய்தும், எந்தத் தவறுமே செய்யாமல் ஒவ்வொரு முறையும் மழை வெள்ளத்தால் நாம் பாதிக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி, முதன்முறையாக மக்கள் மத்தியில் எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆட்சியாளர்களின் தவறுகளைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் தொடர வேண்டும். வரும் 2024 புத்தாண்டு. தமிழகத்திலும், நேர்மையான, பொதுமக்களுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அரசியல் மாற்றத்திற்கான நல்லாண்டாக உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும். ஆரோக்கியமான, மகிழ்ச்சி பொங்கும் நலம் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்

தொடர்புடைய செய்தி