சென்னை சென்ட்ரல்- கூடூர் மின்சார ரயில் சேவையில் நாளை மாற்றம்

70பார்த்தது
சென்னை சென்ட்ரல்- கூடூர் மின்சார ரயில் சேவையில் நாளை மாற்றம்
சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் நாளை (பிப். 24) மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு பிப். 24-ம் தேதி காலை 8.35, 10.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு 24-ம் தேதி காலை 8.05, 9.00, 9.30, 10.30, முற்பகல் 11.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. 

கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு 24-ம் தேதி காலை 9.40 மணி, நண்பகல் 12.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. மேலும், கும்மிடிப்பூண்டி - கடற்கரைக்கு 24-ம் தேதி காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி - சென்ட்ரலுக்கு 24-ம் தேதி காலை 9.55, 11.25, 12.00, மதியம் 1.00, பிற்பகல் 2.30, 3.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அதேபோல், சூலூர்பேட்டை - சென்ட்ரலுக்கு 24-ம் தேதி பகல் 11.45, மதியம் 1.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி