ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: பிரேமலதா

70பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
ஒரு கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. கடந்த 3 மாதத்தில் 6 படுகொலைகள் நிகழ்ந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். கொலை செய்தவர்கள் எந்த அரசியல் பின்புலத்தில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி