தொலைதூர கல்வி படிப்புகளில் சேர ஜூலை 5 முதல் விண்ணப்பம்

82பார்த்தது
தொலைதூர கல்வி படிப்புகளில் சேர ஜூலை 5 முதல் விண்ணப்பம்
தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர ஜூலை 5 முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ். ஏழுமலை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 2024-2025-ம் ஆண்டில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படும். இது தொடர்பாக மாணவர்கள் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் இயங்கி வரும் ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தை அணுகலாம்.

இந்த மையம் சனி, ஞாயிறு உள்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் (அரசு பொது விடுமுறை தவிர) செயல்படும். மேலும், தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தை (www. online. ideunom. ac. in/) பயன்படுத்தியும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், பல்கலைக்கழகத்தின் 64 கற்றல் உதவி மையங்கள் வாயிலாகவும் சேர்க்கை பெறலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் (www. ideunom. ac. in) அறிந்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி