சென்னையில் வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது

66பார்த்தது
"வானவில் நண்பர்கள்" என கலாய்ப்பது சரியல்ல. எங்கள் உணர்வுகளையும் மதியுங்கள் என சென்னையில் இன்று நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணியில் பங்கேற்றவர்கள் ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளனர்.

LGBTIQA+ மக்கள் ஒன்றுகூடி ஜூன் மாதத்தில் பிரமாண்ட பேரணியை உலகெங்கிலும் நடத்தி வருகின்றனர். LGBTIQA+ மக்கள் தங்களுடைய உரிமைகளை வலியுறுத்தி சென்னையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று சுயமரியாதை பேரணியை நடத்தி வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சுயமரியாதை பேரணி இன்று சென்னையில் நடைபெற்றது. தங்களது உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்தப் பேரணியை நடத்தினர். எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சென்னை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பிற ஊர்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். குறிப்பாக இந்த ஆண்டு இளம்பெண்கள் அதிகளவில் வந்திருந்தனர். ஏராளமான திருநங்கைகளும் ஆர்வத்துடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். LGBTIQA+ மக்களின் பெற்றோரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி