முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற 40 புதிய எம். பி. க்கள்

67பார்த்தது
தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுக எம். பி. க்கள், திமுக அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நேற்று முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக உட்பட இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 40 எம். பி. க்கள், பொறுப்புஅமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது, பொறுப்பு அமைச்சர்கள், எம். பி. க்கள், மற்ற கட்சி மற்றும் திமுக நிர்வாகிகளை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். திமுக சார்பில், கனிமொழி எம். பி. , ஆ. ராசா, கதிர்ஆனந்த் உள்ளிட்ட அனைத்து எம். பி. க்களும் வாழ்த்து பெற்றனர்.

காங்கிரஸ் சார்பில் அதன் மாநில தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில், எம். பி. க்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர், விஷ்ணுபிரசாத், கோபிநாத், ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த், விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பர்ட் உள்ளிட்டோர் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்.

இதுதவிர, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கம்யூனிஸ்ட் எம். பி. க்கள், ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன்தலைமையில் அவரது கட்சி எம். பி. யான நவாஸ்கனி மற்றும் நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் எம். பி. க்கள், நிர்வாகிகளும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தொடர்புடைய செய்தி