ரூட் தல பிரச்னை: ரயிலில் மாணவர்கள் மோதல்

60பார்த்தது
ரூட் தல பிரச்னை: ரயிலில் மாணவர்கள் மோதல்
சென்னை - திருத்தணி புறநகர் மின்சார ரயிலில் சென்ற பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களுக்கும், 'சப்தகரி' ரயிலில் சென்ற மாநில கல்லுாரி மாணவர்களுக்கும் கடந்த 1ம் தேதி, 'ரூட் தல' பிரச்னையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

திருத்தணி சென்று கொண்டிருந்த மின்சார ரயில், சிக்னலுக்காக அண்ணனுார் ரயில் நிலையம் அருகே நின்றிருந்தது. அப்போது அவ்வழியே மற்றொரு டிராக்கில் வந்த சப்தகிரி ரயிலில் இருந்த மாநில கல்லுாரி மாணவர்கள், அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தினர்.

ரயில் நின்றதும், கீழே இறங்கி கற்களை எடுத்து பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் மீது வீசினர். இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கடந்த 6ம் தேதி சாம்சன், 19 என்ற மாணவரை ரயில்வே போலீசார் கைது செய்த நிலையில், நேற்று ராணிப்பேட்டையை சேர்ந்த அய்யப்பன், 20, ஜெகன், 18, திருத்தணியைச் சேர்ந்த சரத், 19, வல்லரசு, 19 மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது வாலிபர் என, ஐவரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி