ஆவினில் அஸ்வகந்தா பால் விற்பனை செய்ய திட்டம்

79பார்த்தது
ஆவினில் அஸ்வகந்தா பால் விற்பனை செய்ய திட்டம்
ஆவின் வாயிலாக, பால் மட்டுமின்றி, 230க்கும் மேற்பட்ட பால் பொருட்களும் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்தன. பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பேற்ற பின், நுாடுல்ஸ், பாலாடை கட்டி, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி குல்பி வகைகள், குளிர்ந்த காபி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதற்கு விற்பனை குறைவே காரணம் என்று கூறப்பட்டாலும், பால் பற்றாக்குறையே காரணம் என தெரிய வந்துள்ளது. தற்போது, குளிரூட்டும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் பாலில், தண்ணீர் கலப்பதாக எழுந்துள்ள புகாரும், ஆவின் நிர்வாகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பொதுமக்களை கவரும் வகையில், ஆவினில் ரோஸ்மில்க், மூலிகை பொருட்கள் கலந்த அஸ்வகந்தா பால் விற்பனை துவக்கப் போவதாக, ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆவின் நேரடி பால் விற்பனை மையங்கள் சிலவற்றில், ரோஸ்மில்க் சோதனை ரீதியாக விற்கப்பட்டு வருகிறது. ஆவின் தரப்பரிசோதனை பிரிவில், அஸ்வகந்தா பாலின் ஆய்வக சோதனை துவங்கியுள்ளது. இந்த இரண்டு பொருட்களும், ஆயுதபூஜைக்கு முன், முழுவீச்சில் விற்பனைக்கு வரும் என்று ஆவின் அதிகாரிகள் கூறினர்.

தொடர்புடைய செய்தி