சென்னையில் நடந்த சாலை விபத்தில் இருவர் பலியாகினர்.
சென்னை பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். கொருக்குப்பேட்டையை சேர்ந்த விவேக் (19), அபிஷேக் (18) ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து தொராபாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.