மக்களவை தேர்தல்: சிறப்பு ரயில்கள் இயக்கம்

50பார்த்தது
மக்களவை தேர்தல்: சிறப்பு ரயில்கள் இயக்கம்
மக்களவை தேர்தலை ஒட்டி மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். அதற்கேற்ற வகையில் மக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 4. 45 மணிக்கு புறப்படும் ரயில் கன்னியாகுமரிக்கு மறுநாள் காலை 4. 40 மணிக்கு செல்லும். கன்னியாகுமரியில் இருந்து வரும் 19, 21-ம் தேதிகளில் தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் எழும்பூர் – கோவை, கோவை – எழும்பூர் ஆகிய வழித்தடத்திலும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து, எழும்பூருக்கு 19ம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி