4நாட்களுக்கு வெப்ப அலை...!

51பார்த்தது
4நாட்களுக்கு வெப்ப அலை...!
தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களில் இன்று முதல் 27ம் தேதி வரை 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கியதும் கோடை காலத்துக்கான வெயில் அதிகரிக்க தொடங்கிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது. படிப்படியாக அதிகரித்து வந்த வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரம் தொடங்கியதும், வெப்பத்தின் அளவு ஒரே வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

குறிப்பாக கடந்த வாரம் இயல்பு நிலையை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் அளவு அதிகரித்தது. அதனால், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச அளவாக 108 டிகிரி வரை வெயில் வறுத்தெடுத்தது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இந்தியாவின் மையப் பகுதி மற்றும் தென் பகுதியில் வெப்ப அலை வீசத் தொடங்கியது. அது குறித்து இந்திய வானிலை மையம் ஏற்கனவே அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசியது.

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது.

தொடர்புடைய செய்தி