ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்கள் நியமனம்

77பார்த்தது
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்கள் நியமனம்
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை ஏற்பாடு செய்ய தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து மின்னணு டெண்டர்கள் வரவேற்கப்படுகிறது. 700 ஓட்டுநர்கள் மற்றும் 500 நடத்துனர்கள் 11 மாதங்கள் பணியாற்ற தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் எந்த பணிக்கு எத்தனை நபர்கள் அனுப்ப முடியும் என்பதை ஒப்பந்தாரர்கள் ஒப்பந்த புள்ளியை சமர்ப்பிக்கும் போது தெரிவிக்க வேண்டும். ஓட்டுநர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 1074. 42ம் மாதத்திற்கு ரு. 27, 934. 87ம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 1061. 44ம் மாதத்திற்கு ரூ. 27, 597. 53ம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் அனுப்பும் பணியாளர்கள் ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் விதிக்கப்பட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இந்த டெண்டர் குறித்து வரும் ஆக. 6ம் தேதி மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். ஒப்பந்த புள்ளிகளை வரும்ஆக. 6ம்தேதி முதல் சமர்ப்பிக்கலாம். டெண்டரில் பங்கேற்க டெபாசிட்டாக ரூ. 25 லட்சம் செலுத்த வேண்டும். புள்ளிகளை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் ஆக. 28ம் தேதி மாலை 3 மணிக்கே ஒப்பந்தம் திறக்கப்படும்.

தொடர்புடைய செய்தி