தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சனிக்கிழமை (நேற்று) தலைமைச் செயலகத்தில் உள் துறை சார்பில் 44 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள் காவல்நிலையங்கள் காவல் துறை கட்டடங்கள் உதவி சிறை அலுவலர் குடியிருப்புகள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உள்துறை செயலாளர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.