நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்?: முதல்வர் விளக்கம்

62பார்த்தது
மத்திய பாஜக அரசு, அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துவதால், ‘நிதி ஆயோக்’ கூட்டத்தை புறக்கணித்து மக்கள் மன்றத்தில் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்’ என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான், மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.

மத்திய பாஜக அரசு, தொடர்ச்சியாக தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. தமிழகத்துக்கு அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத்திட்டம் என்றால், அது, மதுரைஎய்ம்ஸ் மருத்துவமனைதான். ஆனால் அதுவும் பத்தாண்டுகள்ஆகியும் என்ன நிலைமையில் இருக்கிறதென உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

3-வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், இந்திய மக்கள் அந்த கட்சிக்கு பெரும்பான்மை அளிக்கவில்லை. ஒருசில மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லையென்றால், பாஜகவால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில், தங்களின் சறுக்கலுக்கு என்ன காரணம் என்று உணர்ந்து, பாஜக திருந்தியிருக்கும் என நினைத்தேன். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி