அதிமுகவை காப்பாற்ற பழனிசாமி ஒன்றிணைவார் என்று பெங்களூரு வா. புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக, ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி, முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், வா. புகழேந்தி, முன்னாள் எம். பி. கே. சி. பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை கடந்த ஜூன் 8-ம் தேதி தொடங்கினர்.
அதைத் தொடர்ந்து மெரினா கடற்கரை எதிரில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு கே. சி. பழனிசாமி, புகழேந்தி ஆகியோர் நேற்று மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
பின்னர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, பழனிசாமியும், சசிகலாவும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும். ஏற்கெனவே பன்னீர்செல்வம், நான் ஒன்றிணைய தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் ஒரு கட்சியை நடத்தி வருகிறார். அவர் வந்து இணைந்தாலும் வரவேற்போம். அனைவரும் ஒத்துழைத்தால் இணைப்பு எளிதாக முடிந்துவிடும். ஒரு நாள் வேலைதான் என கூறினார்.