அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளி: நர்சிங் கவுன்சில் தகவல்

74பார்த்தது
அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளி: நர்சிங் கவுன்சில் தகவல்
அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படித்தால், வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என தமிழக நர்சிங் கவுன்சில் பதிவாளர் எஸ். ஆனி கிரேஸ் கலைமதி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் கவுன்சில் பதிவாளர் எஸ். ஆனி கிரேஸ் கலைமதி கூறியதாவது, தமிழகத்தில் அரசு மற்றும் தனியாரில் பிஎஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ துணை செவிலியர் படிப்புகளை பயிற்றுவிக்க அங்கீகரிக்கப்பட்ட சுமார் 800 கல்வி நிறுவனங்கள் உள்ளன.

அந்த கல்வி நிறுவனங்களில் பட்டியல் https: //www. tamilnadunursingcouncil. com/#/home என்ற தமிழக நர்சிங் கவுன்சில் இணையதளத்தில் உள்ளது. இதில் படித்தால் மட்டுமே கவுன்சிலில் பதிவு செய்து, உரிமம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்களாக பணியாற்ற முடியும். தமிழக அரசும், தமிழக நர்சிங் கவுன்சிலும்தான் நர்சிங் பள்ளிகள், நர்சிங்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குகிறது. ஆனாலும் பல்வேறு பெரிய, சிறிய மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போலியாக நர்சிங் பயிற்சிகளை நடத்தி டிப்ளமோ நர்சிங் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படிக்க வேண்டும். அதேநேரம் உரிய அங்கீகாரம் பெறாமல் மாணவர்களை ஏமாற்றும் கல்வி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி