நீட் தேர்வு தேவையா? - பரிசீலிக்க தமாகா வலியுறுத்தல்

60பார்த்தது
நீட் தேர்வு தேவையா? - பரிசீலிக்க தமாகா வலியுறுத்தல்
நீட் தேர்வு தேவையா என்பதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேவையானவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவும் தேவையில்லை என்று கூறுகின்ற மாநிலங்கள் அவரவர் விருப்பப்படி மாணவர்கள் சேர்க்கைகளை நடத்தவும் அதில் முறைகேடு இல்லாமல் தடுக்கவும் உரிய வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று தமாகா இளைஞரணி தலைவர் எம். யுவராஜா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 7. 5% இட ஒதுக்கீடு கொடுத்து ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்களை உருவாக்க வழிவகை செய்தார். அதுபோல அந்தந்த மாநில அரசுகள் அவரவர் மாநிலங்களில் கல்விக் கொள்கைக்கு ஏற்ப இந்த திட்டங்களை வகுத்து மருத்துவ சேர்க்கை நடத்துவதற்கும் உரிய வழிமுறைகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும், வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் குறித்து முறையான விசாரணை செய்து தவறிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், இந்த குளறுபடிகளால் மாணவர்கள் பாதிக்கப்படாத வண்ணம் தவறுகள் சரி செய்யப்பட வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி