பரட்டை என்றாலும் எனக்கு இருப்பது ஒரிஜினல் முடி: தமிழிசை

56பார்த்தது
பாஜக ஐடிவிங்கில் உள்ளவர்கள் கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக பேசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைவர்களின் கருத்தை கருத்தாக மட்டுமே பதிவு செய்யுங்கள். நான் கடுமையாக உழைப்பதற்காக நான் வந்து இருக்கிறேன். நான் கவர்னராகவே இருந்து இருக்கலாம். ரோட்டில் உட்கார்ந்து இருக்கிறீர்களே என்கிறார்கள். நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை. நான் கவர்னராக இருக்க வேண்டுமா? தலைவராக இருக்க வேண்டுமா என்பதை நான் முடிவு செய்ய வேண்டும். நான் முடிவு பண்ணிட்டேன்.

தமிழ்நாடு களத்தில் தான் நிற்பேன். இணையதள வாசிகளை அடக்கி வையுங்கள். இஷ்டத்திற்கு எழுதினால் தோல்வி என்பது எல்லாருக்கும் வரும். இஷ்டத்திற்கு எழுதுறாங்க. பரட்டை என்றாலும். இது ஒரிஜினல். என் முகத்தை இன்று விகாரமாக போட்டு இருக்கிறார்கள். நான் ஒன்றும் அழகி என சொல்லிக்கொள்ளவில்லையே. தோல்வி என்பது சகஜம் தான். 40 எம்பி வச்சிருக்கீங்க என்ன செய்வீங்க. வெளிநடப்பு செய்வீர்கள். நாங்களாக இருந்தால் வழி நடத்தி இருப்போம் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி