தமாகாவில் அமைப்புரீதியாக மாற்றங்கள் செய்யப்படும்: ஜி. கே. வாசன்

78பார்த்தது
தமாகாவில் அமைப்புரீதியாக மாற்றங்கள் செய்யப்படும்: ஜி. கே. வாசன்
ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற தமாகா போட்டியிட்ட 3தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
அதனால், கட்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக, சமீபத்தில் கட்சியின் 90 சதவீத மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகளை மாற்றிவிட்டு, புதியநிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில், கட்சியின் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் ஜி. கே. வாசன் தலைமையில் தி. நகரில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமாகா வலுவான இயக்கமாக செயல்பட, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அமைப்புரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டத் தலைவர் என்ற வகையில் புதிய மாவட்டத்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைவதற்கான அறிவிப்புகளை, மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். இந்தபட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இடம் பெறவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின் பட்ஜெட்டிலும் தமிழகம் உள்பட பல மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி