தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தவும்: அன்புமணி

82பார்த்தது
தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தவும்: அன்புமணி
தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவைத் தேர்தலுக்கு முன் அவசர, அவசரமாக திறக்கப்பட்ட அனல் மின்நிலையத்தில் நிலக்கரியை பயன்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட செய்யப்படாதது தான் வடசென்னை அதி உய்ய அனல் மின்நிலையம்-3 திறக்கப்பட்டும் நீண்ட நாளாகியும் முடங்கிக் கிடப்பதற்கு காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய சராசரியாக ரூ. 3&4 மட்டுமே செலவாகிறது. ஆனால், வடசென்னை அனல்மின்நிலையத்தின் திட்ட மதிப்பீடு இரு மடங்கிற்கும் மேலாகி விட்டதால், அதில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ரூ. 6க்கும் கூடுதலாக செலவாகிறது. இவ்வாறாக மின்னுற்பத்தி நிலையங்களின் கட்டுமானத்தை திட்டமிட்டு தாமதப்படுத்துதல், அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குதல் ஆகியவற்றால் தான் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது.

எனவே, தமிழக அரசும், மின்சார வாரியமும் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை இனியாவது இலக்கு வைத்து நிறைவேற்ற வேண்டும்; தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி