தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இன்று மாலை 3. 30 மணிக்கு செல்வப்பெருந்தகை பதவியேற்கிறார். அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார், செயலாளர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பினை அவர் ஏற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இப்பதவியில் கே. எஸ். அழகிரி இருந்தார்.