ஜன. 1 இன்றைய விலை நிலவரம்..!

82பார்த்தது
ஜன. 1 இன்றைய விலை நிலவரம்..!
பெட்ரோல், டீசல் மாற்றமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.

2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 1 ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102. 63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94. 24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 590 வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 19 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி