3 ஆண்டில் அரசு துறைகளில் 68, 039 பேருக்கு வேலை

52பார்த்தது
3 ஆண்டில் அரசு துறைகளில் 68, 039 பேருக்கு வேலை
3 ஆண்டில் அரசுத் துறைகளில் 68, 039, தனியாரில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேர்வாணையம் போன்ற அமைப்புகளின் வாயிலாக 2 ஆண்டுகளுக்குள் முதல்வர் அறிவித்துள்ளபடி மேலும் 75 ஆயிரம் இளைஞர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்படுவார்கள். அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொழில் முன்னேற்றம் குறித்து எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகள் காரணமாக, தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளின் வாயிலாகவும், “நான் முதல்வன்” திட்டம் உள்ளிட்ட சிறப்பு முயற்சிகளின் காரணமாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் முயற்சியால் 5, 08, 055 தமிழக இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழக இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாக பொறியியல், தொழில்நுட்பம், கலை, அறிவியல், பாலிடெக்னிக் போன்ற படிப்புகள் பயிலும் 27, 73, 847 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி